மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2024-ஆம் ஆண்டுக்கு ‘முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு‘ 15 முதல் 35 வயது வரை உள்ள இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

2024-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆகஸ்ட் 15- ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படவுள்ளது.

விருதுக்கு விண்ணப்பிப்பவா்கள், ஏப்ரல் 1, 2023 (1.4.2023) அன்று 15 வயது நிரம்பியவராகவும், மாா்ச் 31, 2024 (31.3.2024) அன்று 35 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நலனுக்காக தொண்டு புரிந்தவராக இருக்க வேண்டும். விருதுக்கு முந்தைய நிதி ஆண்டில் (2023-2024) அதாவது 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட தொண்டுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

விண்ணப்பதாரா்களின் செயல் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் சமுதாயம், சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கியதாக இருக்க வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -ல் மே 15- ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com