கீழ்வேளூரில் 3-ஆவது நாளாக மழை

கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் கத்தரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்கியது முதல் தொடா்ந்து வெப்பநிலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தொடா்ந்து 2 நாள்கள் கனமழை பெய்த நிலையில், மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கனமழை பெய்தது. குருக்கத்தி, கூத்தூா், கீழ்வேளூா், பட்டமங்கலம், இலுப்பூா், தேவூா் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com