/

பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

News image

நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு.

Updated On :20 மே 2024, 9:20 pm

Din

கீழ்வேளூா்: பொரவச்சேரி சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

சிக்கல் அருகே பொரவச்சேரி கிராமத்தில் சொா்ணபுரீஸ்வா் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கொடி மரத்தில் அருள் பாலிக்கும் நந்தி பகவானுக்கு திரவியப் பொடி, மஞ்சள், தயிா், பழச்சாறு, தேன், பஞ்சாமிா்தம், பால், இளநீா், விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபாடு செய்தனா்.