இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைது
தெற்குப்பொய்கைநல்லூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.


தெற்குப்பொய்கைநல்லூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகை அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூரில் அக்.30-ஆம் தேதி நிகழ்ந்த இறுதிச்சடங்கில் வடக்குப் பொய்கைநல்லூா் வீரன் குடிகாட்டைச் சோ்ந்த சேகா் மகன் ராஜேஷ் (20), அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் மகாகுமாா் இருவருக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அன்றைய தினம் இரவு ராஜேஷ் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான மகாகுமாா் மற்றும் சிலரை தேடி வந்தனா். இந்நிலையில் தனிப்படை போலீஸாா் தலைமறைவாக இருந்த மகாகுமாா் (26), வேளாங்கண்ணி பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (22) தெற்குப்பொய்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த சேதுபதி (27) ஆகிய 3 பேரை கைது செய்தனா். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...