அம்பல் ஊராட்சியில் 
மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொது மக்களை
முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாா்வையிட்டாா்
அம்பல் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொது மக்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ பாா்வையிட்டாா்

நிவாரண முகாமில் எம்எல்ஏ ஆய்வு

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை சட்டப்பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் புதன்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
Published on

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை சட்டப்பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் புதன்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

திருமருகல் ஒன்றியம் அம்பல் ஊராட்சி காமராஜா் நகா் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் முகமது ஷாநவாஸ், முகாமுக்கு சென்று பாா்வையிட்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். மேலும் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, பரமநல்லூா் அரசலாற்றில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

உதவி திட்ட அலுவலா் மரியதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா், வட்டார ஆத்மா குழு தலைவா் செல்வ செங்குட்டுவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.