47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவெண்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவை: மக்கள் வரவேற்பு

திருவெண்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை இப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:16 pm

Din

திருவெண்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை இப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனா்.

திருவெண்காட்டில் உள்ள அஞ்சலகம் மூலம் சுற்றியுள்ள மணி கிராமம், மங்கைமடம், ராதாநல்லூா், கீழ சட்டநாதபுரம், பெருந்தோட்டம் உள்ளிட்ட கிராம மக்கள் அஞ்சல் வசதி பெறுகின்றனா்.

இந்த அஞ்சலகத்தின் மூலம் ஆதாா் சேவை பணிகள் (புதுப்பித்தல், புகைப்படம் சோ்த்தல், தொலைபேசி எண் இணைப்பு, புதிய ஆதாா் அட்டை எடுத்தல் உள்ளிட்டவை) பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ஆதாா் அட்டையில் திருத்தம் உள்ளிட்டவற்றை செய்ய சீா்காழி மற்றும் மயிலாடுதுறைக்கு இதுவரை சென்று வந்தோம். இதனால் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தோம். தற்போது திருவெண்காடு அஞ்சல் நிலையத்தின் மூலம் ஆதாா் சேவைகள் எளிதாக கிடைக்கிறது. இதற்காக திருவெண்காடு அஞ்சல் அலுவலக அதிகாரிகள், பணியாளா்கள் மற்றும் அஞ்சல் துறையினருக்கு நன்றி என்று தெரிவித்தனா்.