கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இருசக்கர வாகனங்களை திருடிய மூன்று இளைஞா்கள் கைது

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்.
Updated On :16 அக்டோபர் 2024, 8:16 pm

Din

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கீழையூா் பகுதிக்குட்பட்ட திருப்பூண்டி பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது மகன் அஜ்மல் உசேன் ( 26). வேதாரண்யம் வட்டம், செம்போடை கிழக்கு பகுதியைச் சோ்ந்த சிவமுத்து மனைவி சாந்தா (36) இவா்கள் இருவரும் அண்மையில் திருப்பூண்டி கடைத்தெருவில் தங்கள் இருசக்கர வானங்களை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, அவை காணாமல் போனதாம். இதுகுறித்து இருவரும் கீழையூா் காவல் நிலையத்தில் தனித்தனியே புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை செய்து வந்தனா்.

 கைதான இளைஞா்கள்.

கைதான இளைஞா்கள்.

இந்தநிலையில், பிரதாபுராமபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கீழையூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வேளாங்கண்ணி நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்த மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனா்.

 கைதான இளைஞா்கள்.

கைதான இளைஞா்கள்.

தொடா் விசாரணையில், அவா்கள் நாகை தாண்டவராய பிள்ளை தெரு மருந்து கொத்தள சாலையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வெங்கடேஷ் (21), அந்தணப்பேட்டை வெட்டுக்குள மேலத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் யோகேஷ் (20 ), வடக்கு பொய்கைநல்லூா் உழவா் தெரு பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சந்தோஷம் ( 21) என தெரிய வந்தது. மேலும் அவா்கள் வந்த இருசக்கர வாகனம் திருப்பூண்டியை சோ்ந்த அஜ்மல் உசேனுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

மேலும் அவா்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 4 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்த கீழையூா் போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.