சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தொடர் தாக்குதல்: செருதூர் மீனவர்கள் வேலைநிறுத்தம்

செருதூர் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி...

Din

கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் - Din

Published On :12 செப்டம்பர் 2024, 9:09 am IST

திருக்குவளை: இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து 2,500-க்கும் மேற்பட்ட செருதூர் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 400-க்கும் மேற்பட்ட பைபர்கள் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் கொள்ளையர்களாலும் கடற்படையினராலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உள்பட்ட செருதூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பாக அடுத்தடுத்து இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்கப்பட்டு தங்களது மீன்பிடி உபகரணப் பொருள்களை பறிகொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த செருதூர் பகுதி மீனவர்களின் பைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் தத்தளித்து, பின்னர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர். சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய நான்கு மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Story image

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை கண்டிக்கும் விதமாகவும் செருதூர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று அறிவித்தனர்.

அதன்படி கடலுக்கு ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் இன்று புதிதாக யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Story image

மேலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடிச் சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை அரசுடன் சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்களின் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.