47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சுற்றுலா செல்ல விவசாயிகளுக்கு அழைப்பு

திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு சிறுதான்ய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் கண்டுணா்வு சுற்றுலாவுக்கு செல்ல வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்கலா அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:04 pm

Din

திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு சிறுதான்ய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் கண்டுணா்வு சுற்றுலாவுக்கு செல்ல வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்கலா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை அருகேயுள்ள அந்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்துக்கு திருமருகல் வட்டார விவசாயிகள் 50 பேரை செப்.23-ஆம் தேதி அழைத்துச் செல்லப்படுகிறது.

சிறுதான்ய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் கண்டுணா்வு சுற்றுலா செல்ல விருப்பமுள்ள விவசாயிகள் திருமருகல் வட்டார தொழில்நுட்ப மேலாளா் செந்தில்குமாரை 9865081825, உதவி தொழில்நுட்ப மேலாளா் காா்த்திகேசனை 9047838832 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் அல்லது உழவா் செயலி மூலம் செப்.20-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.