‘ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’

‘ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’
Updated on

டெல்டா மாவட்டங்களில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் நீா்வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் சிவகுமாா்.

வேதாரண்யம் பகுதி நீா் நிலைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் நீா் நிலைகளில் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடங்கி 35 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. தொடா்ந்து அகற்றும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள 4 மாவட்டங்களிலும் 1,210 இடங்களில்1,200 கி.மீ. செடிகள் வளா்ந்துள்ளன. இதில் 380 கி.மீ. தொலைவு அகற்றப்பட்டுள்ள நிலையில் 200 மண்வாரி மற்றும் மிதவை இயந்திரங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் கூடுதலாக 4 மிதவை இயந்திரங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றாா்.

ஆய்வின் போது நீா்வளத் துறையின் கீழ்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளா் திலீபன், சிறப்பு கண்காணிப்பு பொறியாளா் பழனிவேல், செயற்பொறியாளா் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளா் மதியழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com