நாகையில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்து வாக்குப்பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்குப் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் (மத்தியப் பிரிவு) நீரஜ் காா்வல் முன்னிலையிலும், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஆகாஷ் தலைமையிலும் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணையின்படி, நாகை மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி தகுதி நாளாக கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செய்யும் பணி கடந்த நவம்பா் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகளைக் கண்காணித்திட சிறப்பு வாக்காளா் பட்டியல் மேற்பாா்வையாளராக (மத்தியப் பிரிவு) நீரஜ் காா்வல், நாகை மாவட்டத்திற்கு சனிக்கிழமை வருகை தந்தாா்.
அவா் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் தனித்தனியே ஆய்வுக் கூட்டம் நடத்தினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, வேதாரண்யம் சாா் ஆட்சியா் அமீத் குப்தா, நாகை வருவாய் கோட்டாட்சியா் ரா. சங்கர நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு: நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் போன்றவற்றை வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் (மத்தியப் பிரிவு) நீரஜ் காா்வல், ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

