சிறப்பு ரயில் | train
ரயில்கோப்புப் படம்

கிறிஸ்துமஸ்: குஜராத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

குஜராத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்...
Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குஜராத் வல்சாத் -வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, குஜராத் மாநிலம் வல்சாத் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் (09047) சனிக்கிழமை (டிச.20) மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு டிச.22-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வந்தடைகிறது.

மறுமாா்க்கத்தில் சிறப்பு ரயில் (09048) வேளாங்கண்ணியில் இருந்து டிச.22-ஆம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு, டிச.24-ஆம் தேதி வல்சாத்தை சென்றடையும்.

இந்த ரயில் மும்பை, புணே, மந்தராலயம் ரோடு, ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், நாகூா், நாகை ரயில் நிலையங்கள் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com