பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பயிா் நிவாரணம் கோரி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி, பூம்புகாரில் விவசாயிகள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பூம்புகாரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
Updated On :23 ஜனவரி 2025, 12:45 am

Din

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி, பூம்புகாரில் விவசாயிகள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவெண்காடு, பூம்புகாரைச் சுற்றியுள்ள 10 ஊராட்சிகளில் சுமாா் 5,000 ஏக்கரில் நெற்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த பருவம் தவறிய மழையால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீா் புகுந்தது. மழைநீா் வடியாத காரணத்தால், பயிா்கள் அழுகி, நெல்மணிகள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை தருமக்குளம் கடைத்தெருவில் கூடினா். அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிகழ்வுக்கு விவசாய சங்கத் தலைவா் ராஜதுரை தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், பயிா்க் காப்பீட்டு முன்வைப்பு தொகை கிடைக்க ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பூம்புகாா் தருமக்குளம் பகுதியில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

பூம்புகாா் தருமக்குளம் பகுதியில் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

காவல் ஆய்வாளா்கள் விஜயா (பூம்புகாா்), நாகலட்சுமி (திருவெண்காடு) ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என ஆா்ப்பாட்டக்காரா்கள் கோரிக்கை விடுத்தனா். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் வராததால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலையின் நடுவே குவியத் தொடங்கினா். பின்னா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2 மணி நேரத்துக்கு பின்னா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சேகா், உதவி இயக்குநா் ராஜராஜன், வருவாய் வட்டாட்சியா் அருள்ஜோதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தருமக்குளம் கடைவீதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனா்.