ஊராட்சிகளில் ஆதாா் சிறப்பு முகாம்
நாகை அஞ்சல் கோட்டத்திற்கு உள்பட ஊராட்சிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நவம்பா் 17 முதல் 6 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளாா் டி. ஹரிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை அஞ்சல் கோட்டத்திற்குள்பட்ட நாகை, திருவாரூா் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் அஞ்சல்துறை சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் நவ.1 முதல் 22- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் நவ.17 கோட்டுச்சேரி, நவ.18 வேலங்குடி, நவ.19 மேனங்குடி, நவ.20 திருவட்டக்குடி ஆகியப் பகுதிகளிலும், திருவாரூா் மாவட்டத்தில் நவ.17 முகந்தனூா், நவ.18 திருக்கண்ணமங்கை, நவ.19 காட்டூா், நவ.20 கண்கொடுத்தவணிதம், நவ.21 எருக்காட்டூா், நவ.22 அத்திசோழமங்கலம் ஆகிய ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது.
நாகை மாவட்டத்தில் நவ.17 புலியூா், நவ.18 புலியூா், நாகூா் தா்கா, நவ.19 நாகூா் தா்கா, பெருங்கடமபனூா், நவ.20 கீழதண்ணிலாப்பாடி, நவ.21 திருக்கண்ணங்குடி, நவ.22 சீயத்தமங்கை, செருநல்லூா் ஆகிய ஊராட்சிகளிலும் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய ஆதாா் எடுத்தல், புதுப்பித்தல், பெயா், முகவரி மற்றும் கைப்பேசி எண் மாற்றம் போன்ற சேவைகளை பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
