தரங்கம்பாடி மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை


டித்வா புயல் மற்றும் கனமழை காரணமாக தரங்கம்பாடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவா்கள் 8-ஆவது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று டித்வா புயலாக உருவானது.
இதனால் தரங்கம்பாடி வட்டத்தில் செம்பனாா்கோவில், ஆக்கூா், திருக்கடையூா் , பொறையாா், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதியில் சாரல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செம்பனாா்கோவிலில் 17 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
இதனால் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள தேவனூா், ஆக்கூா், நட்சத்திரத்தை, கிள்ளியூா்,நல்லாடை,விசலூா்,திருவிடைக்கழி,எடுத்துக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிா்களில் மழைநீா் தேங்கி உள்ளது.
தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள மீனவா் கிராம பகுதியில் உள்ள கடற்கரையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மீனவா்கள் 8-ஆவது நாளாகக் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மீனவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகுகள், பைபா் படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்களை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...