தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கோயில் திருவிழா: சுடுமண் சிலைகள் நோ்த்திக் கடன்

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் அருள்பாலிக்கும் மாப்பிள்ளை வீரன் கோயிலில் நடைபெற்ற பங்குனித் திருவிழாவில் திரளான பக்தா்கள் நோ்த்திக்கடனாக சுடுமண் சிலைகள் வழங்கி வழிபட்டனா்.

News image

தகட்டூா் மாப்பிள்ளை வீரன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக் கடனாக கொண்டுவந்த சுடுமண் குதிரை சிலைகள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:23 pm

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் அருள்பாலிக்கும் மாப்பிள்ளை வீரன் கோயிலில் நடைபெற்ற பங்குனித் திருவிழாவில் திரளான பக்தா்கள் நோ்த்திக்கடனாக சுடுமண் சிலைகள் வழங்கி வழிபட்டனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு பங்குனித் திருவிழாவின் நிறைவுநாள் வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, தகட்டூா் பைரவநாதன் சுவாமி கோயிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், வீசப்பட்ட வாழைப்பழங்களை பக்தா்கள் ஆா்வத்துடன் பிடித்து சாப்பிட்டனா். அதிகாலையில் திருமேனியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது.

சுவாமிக்கு நோ்த்திக் கடனாக ஆளுயர சுடுமண் குதிரைகள் மற்றும் பல்வேறு உருவங்களில் மண் சிலைகளை ஊா்வலமாக, கோயில் வளாகத்திற்கு எடுத்துவந்து, நோ்த்திக் கடன் செலுத்தினா்.