வேதாரண்யம் அருகே சிப்காட் அணுகு சாலைக்கு அளவீட்டுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், விஷம் குடித்து, தீக்குளிக்க முயன்ற தம்பதியால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டைக்கு அணுகு சாலை அமைப்பது தொடர்பாக விளைநிலத்தில் நில அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தம்பதியினருக்கு சிகிச்சை அளித்தபோது... - படம் - தினமணி
தென்னடார் ஊராட்சியில் அரசு அதிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப் போவதாக 2025 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலத்தில் அணுகு சாலை அமைக்கப் போவதாகக் கூறி நில அளவீட்டுப் பணிக்கு சனிக்கிழமை காலையில் அதிகாரிகள் சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயியை போலீஸார் தூக்கிச் சென்றபோது... - படம் - தினமணி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் முற்றுகையிட்ட நிலையில் விவசாயி மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது துணைவியார் தீக்குளிக்க முயன்றார்.
கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி 3 மணி நேரத்துக்கு பின்னர் தம்பதியரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஏராளமானமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Summary
Farmers near Vedaranyam have opposed the land survey for the SIPCOT access road. Additionally, a commotion ensued in the area after a couple attempted self-immolation following the consumption of poison.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமி விஷம் குடித்து தற்கொலை

பால்பண்ணை- துவாக்குடி அணுகுசாலை அகலத்தை குறைக்கக் கூடாது: சாலை மீட்பு கூட்டமைப்பு
சிப்காட் விவகாரம்: அணுகு சாலைக்கு அளவீடு செய்ய வந்த அதிகாரி முற்றுகை

சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்




