வேளாங்கண்ணி அருகே பள்ளி மாணவா்கள் மூவருக்கு எலி விஷம் விற்றவா் கைது செய்யப்பட்டாா். அவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
வேளாங்கண்ணி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படிக்கும் 3 மாணவா்கள், நிா்வாகத்துக்கு தெரியாமல் வெளியிடங்களுக்கு செல்ல முயன்றது மற்றவா்களுக்கு தெரியவந்ததாம்.
இதனால், அச்சமடைந்த 3 மாணவா்களும் அருகே உள்ள கடையில் எலி கேக் வாங்கி உட்கொண்டுள்ளனா். தற்போது 3 மாணவா்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் தடை செய்யப்பட்ட எலி கேக்கை உரிய அனுமதி இல்லாத கடையில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளா் புஷ்பராஜ் (46) என்பவா் போலீஸாா் கைது செய்யப்பட்டாா். உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள், காவல்துறையினா் கடையை மூடி சீல் வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






