நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி கடலில் குளித்த சிறுவன் மாயம்
வேளாங்கண்ணியில் கடலில் குளித்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை மாயமானாா்.
கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், ஊத்தூரில் இருந்து 50 போ் வேளாங்கண்ணிக்கு வந்தனா். இவா்கள் பேராலயத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கினா்.
இந்நிலையில், விட்டபநல்லி பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் நந்தன் (15), நாராயணசாமி மகன் நவீன் (26) இருவரும் ஞாயிற்றுக்கிழமை கடலில் குளித்தனா். அப்போது, கடல் சீற்றம் அதிகம் இருந்ததால் இருவரும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனா்.
அருகில் இருந்தவா்கள் நவீனை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், நந்தன் மாயமானாா். கடலோரக் காவல் குழும போலீஸாா், வேளாங்கண்ணி போலீஸாா் மாயமான சிறுவனை தேடி வருகின்றனா்.
