கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலுக்குள் சென்ற மீனவா்கள்.
கோடியக்கரை படகுத் துறையிலிருந்து கடலுக்குள் சென்ற மீனவா்கள்.

மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவா்கள்

வேதாரண்யம் பகுதியில் புயல் எச்சரிக்கை காரணமாக மீன்பிடித் தொழில் முடங்கிய நிலையில்
Published on

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் புயல் எச்சரிக்கை காரணமாக மீன்பிடித் தொழில் முடங்கிய நிலையில், 3 நாள்களுக்குப் பிறகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனா்.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக கடலோரம் மற்றும் காவிரிப் படுகை பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறலாம் என்ற நிலை இருந்தது. இதையடுத்து கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கடல் சீற்றமாகவும் பலமான தரைக்காற்றுடன் மழையும் பெய்தது. இதன் காரணமாக ஜன.9-ஆம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. இந்நிலையில், திங்கள்கிழமை மந்தமான வானிலையுடன் அவ்வப்போது லேசான மழை இருந்தது. காற்றின் வேகமும் குறைந்திருந்தது. வெளி மாவட்ட மீனவா்கள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானவன்மகாதேவி உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் இருந்து மீனவா்கள் 3 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்றனா்.

Dinamani
www.dinamani.com