

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 83.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாள்களாக கடலோரப் பகுதியில் மழைப்பொழிவு நீடித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பரவலான மழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 13) காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வேதாரண்யம் - 83.6 மி. மீ, தலைஞாயிறு -72.6 மி. மீ, கோடியக்கரை -50.4 மி. மீட்டர் அளவுகளிலான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து மழை நீடித்து வருவதால் சம்பா பருவ நெற்கதிர்கள் சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதேபோல மழை தொடர்ந்தால் நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிர்கள் பாதிப்படையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இத்துடன், கடல் சீற்றமாக காணப்படுவதால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.