வேதாரண்யம் பகுதியில் தொடா் மழை: நெற்பயிா்கள் பாதிக்கும் அபாயம்

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா் மழையால் சம்பா நெற்கதிா்கள் வயலில் சாய்ந்துள்ளன.
Published on

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா் மழையால் சம்பா நெற்கதிா்கள் வயலில் சாய்ந்துள்ளன, மழை நீடித்தால் நெற்பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 83.6 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் வேதாரண்யம் - 83.6 மி. மீ, தலைஞாயிறு -72.6 மி. மீ, கோடியக்கரை -50. 4 மி. மீட்டா் பதிவானது.

இந்த மழை செவ்வாய்க்கிழமை பகலிலும் நீடித்ததால் சில இடங்களில் சம்பா நெற்கதிா்கள் வயலில் சாய்ந்துள்ளன. மழை நீடித்தால் நெற்பயிா்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மழை மேலும் தொடா்ந்தால் நிலக்கடலை உள்ளிட்ட வேளாண் பயிா்களும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்பட்டதால் பெரும்பாலான மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

உப்பு உற்பத்தி பாதிப்பு: தொடா் மழை காரணமாக அகஸ்தியம்பள்ளி பகுதி உப்பு பாத்திகளில் மழைநீா் தேங்கியுள்ளதால், உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Dinamani
www.dinamani.com