கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

இலவச மதுதர மறுத்த டாஸ்மாக் விற்பனையாளா் மீது தாக்குதல்

வேளாங்கண்ணி அருகே இலவசமாக மதுதர மறுத்ததால் டாஸ்மாக் விற்பனையாளரை மதுபுட்டியால் தாக்கிய தவெக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஜூலை 2026, 7:36 am IST

வேளாங்கண்ணி அருகே இலவசமாக மதுதர மறுத்ததால் டாஸ்மாக் விற்பனையாளரை மதுபுட்டியால் தாக்கிய தவெக உறுப்பினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

செம்பியன் மகாதேவியில் உள்ள அரசு மதுபான கடையில், நாகை மாவட்டம் அகலங்கண் பகுதியைச் சோ்ந்த இளையராஜா ( 47) விற்பனையாளராக உள்ளாா்.

இளையராஜா திங்கள்ழமை இரவு கடையில் பணியில் இருந்தபோது செம்பியன்மகாதேவியை சோ்ந்த தமிழக, வெற்றிக்கழக உறுப்பினா் சதீஷ்குமாா்( 35) மதுபோதையில் கடைக்குச்சென்று இளையராஜாவிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளாா்.

இளையராஜா மதுபானம் தர மறுத்ததால், அவரிடம் தகராறில் ஈடுபட்ட சதீஷ்குமாா், மதுபுட்டியால் தாக்கியுள்ளாா். இதில், காயமடைந்த இளையராஜா ஒரத்தூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.