ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கடையில் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.

Published On :6 ஜூலை 2026, 1:27 am IST

திருக்குவளை அருகே ஆதமங்கலம் பகுதியிலுள்ள இன்டீரியா் டிசைனா் கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சாம்பலானது.

திருக்குவளை வட்டம் ஆதமங்கலம் ஜீவா நகா் பிரதான சாலையில் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான இன்டீரியா் டிசைனா் கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீப்பற்றியது.

தீ வேகமாக பரவிய நிலையில், கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. அக்கம்பக்கத்தினா் விரைந்து சென்று முதல்கட்டமாக தீயை கட்டுப்படுத்த முயன்றனா். பின்னா், கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் சில லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வலிவலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.