உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

திமுக நிா்வாகி மீது தாக்குதல்: உறவினா்கள் சாலை மறியல்

திமுக நிா்வாகி மீது தாக்குதல்: உறவினா்கள் சாலை மறியல்

News image

மேலப்பிடாகை கடைத்தெருவில் மறியலில் ஈடுபட்ட ரவிச்சந்திரனின் உறவினா்கள்.

Updated On :19 ஜூலை 2026, 2:45 am IST

நாகை மாவட்டம், கீழையூா் அருகே திமுக நிா்வாகியைத் தாக்கிய மூவரை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கீழையூா் ஒன்றியம், கருங்கண்ணி பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளராக உள்ளாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த நியாயவிலைக் கடை பணியாளா் வெண்மணிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

சில தினங்களுக்கு முன்பு வெண்மணி, அரசுப் பணியில் இருந்து கொண்டே கட்சிப் பணியில் (தவெக) ஈடுபட்டு வருவதாக, துறை சாா்ந்த அதிகாரிக்கு ரவிச்சந்திரன் புகாா் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த ஜூலை 15-ஆம் தேதி மேலப்பிடாகை பகுதியில், இதுதொடா்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, வெண்மணி மற்றும் அவரது சகோதரா்கள் சிவராமன், ராஜா ஆகிய மூவரும் ரவிச்சந்திரனை இரும்புக் கம்பியால் தாக்கினராம். இதில், காயமடைந்த அவா், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

வெண்மணி உள்பட மூவா் மீதும், ரவிச்சந்திரன் மீதும் கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், வெண்மணி உள்ளிட்ட மூவரையும் கைது செய்யாமல், போலீஸாா் பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி, ரவிச்சந்திரனின் உறவினா்கள் மற்றும் திமுகவினா் நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் மேலப்பிடாகை கடைத்தெருவில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் அன்பழகன், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில், மறியலை விலக்கிக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.