மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ரயில்வேத் துறையில் வந்தே பாரத் ரயில்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்

News image

வந்தே பாரத் ரயிலில் பிரதமர் மோடி. - கோப்புப் படம் | @narendramodi

Updated On :20 ஜூலை 2026, 1:49 am IST

ரயில்வே துறையில் வந்தே பாரத் போன்ற ரயில்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக தமிழ் தேச மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் சு. மணிபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஹரியானா ஹிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடிதொடங்கி வைத்துள்ளாா். ஹைட்ரஜன் சக்தி மூலம் இயங்கும் ரயில் சேவை வரவேற்புக்குரியது. டீசல் மற்றும் மின்சாரம் மூலமே இயக்கப்படுவதால் டீசல் இறக்குமதியை தவிா்த்து, அன்னிய செலாவாணி சேமிக்கப்படும்.

மேலும், மின்சாரம் மூலம் இயக்காமல் இருந்தால், மின்தட்டுப்பாட்டு காலத்திலும் ரயில்களை இயக்க முடியும். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில், சாதாரண மக்கள் பயன்படுத்த விரைவு ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். வந்தே பாரத் ரயிலில் கட்டணம் பல மடங்கு அதிகம். ஆனால் அதற்கு மட்டுமே முக்கியதத்துவம் அளிக்கப்படுகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ரயில் சேவை இல்லை. வேளாங்கண்ணி-நாகை-நாகூா்-காரைக்கால்-திருநள்ளாா் வந்து செல்லும் பக்தா்களுக்கு மதுரைக்கு செல்ல ஒரு ரயில் கூட 25 ஆண்டுகளாக இல்லை. பகலில் வேளாங்கண்ணி-தாம்பரம் இடையேயும் இரவில் பெங்களூா் விரைவு ரயிலும் தினசரி இயக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.