மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

நாகையில் மீன்பிடிப் படகுகள் ஆய்வு தீவிரம்

நாகை மாவட்டத்தில் விசைப் படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

மீன்பிடிப் படகுகள் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:20 am IST

நாகை மாவட்டத்தில் விசைப் படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழக அரசு கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் விசைப்படகு ஒன்றுக்கு ஆண்டுக்கு 19 ஆயிரம் லிட்டா் டீசல் விற்பனை வரியின்ன்றி மானிய விலையில் வழங்குகிறது. இந்த மானிய டீசல் பெறும் மீன்பிடிப் படகுகளை, மீன் வளத்துறையினா், தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவுக்கு வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து, மானிய டீசலுக்கு படகு உரிமையாளரிடம் புதிய புத்தகம் வழங்கி வருகின்றனா்.

நாகை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 546 விசைப்படகுகளில் படகின் பாதுகாப்பு, தரம், படகு நீளம், அகலம், படகில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் குதிரைத் திறன் குறித்த ஆய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆய்வில், நாகை, மயிலாடுதுறை, திருவாரூா்,தஞ்சாவூா் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத்துறை அதிகாரிகளின் 20 போ் ஈடுபட்டனா். இந்நிலையில், மீன்வளத்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கும், தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகளுக்கும் மானிய விலையில் டீசல் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.

மேலும் பயன்பாட்டில் இல்லாத படகுகளுக்கும் மானிய டீசல் பெறும் முறைகேட்டை கண்டுபிடித்து தடுக்கவும் ஆய்வு நடத்தப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.