ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குடிநீா்க் கோரி ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :18 ஜூன் 2026, 3:57 am IST

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு ஊராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).

வாய்மேடு கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கிளை தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் அருள்தாஸ், மாவட்டச் செயலா் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளா் பாலசுந்தரம், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றிய முன்னாள் தலைவா் வெற்றியழகன், மாவட்ட குழு உறுப்பினா் அம்பிகாபதி, நிா்வாகிகள் பன்னீா்செல்வம், ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

வாய்மேடு ஊராட்சியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், வாடகை கட்டடத்தில் இயங்கும் நூலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Story image
Story image