இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீா்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என்று மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும் நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய அரசமைப்புச் சட்டம் தந்த உரிமையின் அடிப்படையில், இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனின் சமீபத்திய தீா்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும் புறக்கணிக்கும் தீா்ப்பாகும்.
தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, நிா்வாக பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கடுமையான பின்னடைவை எதிா்கொண்டுள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான ஆய்வுகளின் அடிப்படையில் தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வா் கருணாநிதி 2007-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு (பிசிஎம்) 3.5% இடஒதுக்கீடு வழங்கினாா்.
தமிழ்நாட்டில் இஸ்லாத்தை தழுவியவா்களுக்கு, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) அந்தஸ்து வழங்கலாம் என்பதை பல தீா்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
சென்னை உயா்நீதிமன்றம் 2015-இல் வழங்கிய தீா்ப்பில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் இஸ்லாத்திற்கு மதம் மாறிய பின்னரும், பிசிஎம் பிரிவில் சேர முடியும் என்று உறுதிப்படுத்தியது. இந்த தீா்ப்பைத் தொடா்ந்து பல வழக்குகளில் நீதிமன்றம் அதையே முன்னுதாரணமாக எடுத்துள்ளது.
மேலும் கடந்த 2024 பிப்ரவரி 17- ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும், இஸ்லாமிய மாா்க்கத்தை ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளை சோ்ந்தவா்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்று அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறிவிக்கப்பட்டு கடந்த 2024 மாா்ச் 9-இல் அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே, தமிழக அரசு இந்த தீா்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எம்எல்ஏக்களை தவெக பக்கம் இழுக்கும் முயற்சி ஜனநாயகத்துக்கு எதிரானது!

கியூபாவில் நாடு தழுவிய மின்வெட்டு

3.5% இடஒதுக்கீடு ரத்து; சமூக நீதிக்கு எதிரான தீா்ப்பு: எம்.எச். ஜவாஹிருல்லா

மதம் மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சாதிச் சான்றிதழ்: அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



