9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

சாலை விபத்தில் உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :29 ஜூன் 2026, 2:46 am IST

கீழையூா் அருகே சாலையோர மரத்தில், இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உணவகத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் அருகேயுள்ள பிரதாப ராமபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (36). அதே பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்துவந்த இவா், சனிக்கிழமை மாலை வேலை முடிந்ததும், வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

நாகை-வேதாரண்யம் சாலையில் சென்றபோது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், சாலையோர மரத்தில் மோதியது.

இதில் விஜயகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கீழையூா் போலீஸாா், விஜயகுமாரின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.