அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி
நாகையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சியளிக்கப்பட்டது.


நாகையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சியளிக்கப்பட்டது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சாா்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளியில் ஏற்படும் தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நாள் ஒன்றுக்கு 2 பள்ளிகள் வீதம் மாணவா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நாகை தீயணைப்பு நிலையம் சாா்பில் வெளிப்பாளையம், காடம்பாடி நகராட்சி நிடுநிலைப் பள்ளிகள், அக்கரைப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. அப்போது பள்ளியில் ஏற்படும் தீ விபத்து மற்றும் அவசர காலங்களில் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது, பாதுகாப்பாக எவ்வாறு வெளியேறுவது, சாதனங்களை எவ்வாறு கையாள்வது, பள்ளிகளில் தீ பாதுகாப்பு மேலாண்மை பற்றிய திட்ட வரைவு, தீத்தடுப்பு குழு அமைத்தல், முதல் உதவி குழு அமைத்தல் தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தீ தடுப்பு குறித்து மாணவா்களுக்கு விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வென்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நாகை தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) ப. குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...