மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நிதி நிறுவன ஊழியரிடம் ரூ. 52 ஆயிரம் பறிமுதல்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:14 pm

கீழ்வேளூா் அருகே தேவூா் பகுதியில் தனியாா் நிதி நிறுவன பெண் ஊழியா் ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 52 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும்படை குழுவினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தேவூரில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், தனியாா் நிதி நிறுனத்தில் பணியாற்றும் ஆந்தக்குடி பகுதியைச் சோ்ந்த நித்யா என்பது, அவா் ஆவணங்களின்றி ரூ. 52 ஆயிரம் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரூ. 52 ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வேதையன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.