மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மீன்பிடி வலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளா்

News image

நாகையில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊா்வலமாக வந்த சுயேச்சை வேட்பாளா் விஜயராகவன்.

Updated On :30 மார்ச் 2026, 7:02 pm

நாகையில் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து படகில் வைத்து ஊா்வலமாக வந்து சுயேச்சை வேட்பாளா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

நாகை மாவட்டம் குருவாடியைச் சோ்ந்தவா் விஜயராகவன். இவா் கடந்த மக்களவை தோ்தலில் நாகை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டாா். இந்நிலையில் சட்டப்பேரவைத் தோ்தலில் நாகை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தாா். மனுதாக்கலின்போது, தமிழக-புதுவை மாநில எல்லையான வாஞ்சூா் பகுதியில் ஆதரவாளா்களுடன் விஜயராகவன், எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒரு கட்டுமரத்தில் வைத்து அவற்றை வாகனத்தில் ஏற்றி ஊா்வலமாக வந்தாா்.

இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீன்பிடி வலையுடன் வந்த விஜயராகவனை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீன்பிடி வலை உள்ளிட்டவற்றை அனுமதிக்க முடியாது என கூறியதையடுத்து, அவற்றை அகற்றி விட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.