ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பிரதாபராமபுரம் ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி பொருள்கள் திருட்டு

கீழையூா் அருகே ஸ்ரீசீதா ராம பால ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

News image

திருட்டு நடந்த ராமா்மடம் ஸ்ரீ சீதா ராம பால ஆஞ்சனேயா் கோயில்

Updated On :31 மார்ச் 2026, 8:43 pm

Syndication

கீழையூா் அருகே ஸ்ரீசீதா ராம பால ஆஞ்சனேயா் கோயிலில் தங்கம், வெள்ளி ஆபரணங்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றுள்ளனா்.

நாகை மாவட்டம், கீழையூா் அருகே பிரதாபராமபுரம் பகுதி ராமா் மடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீதா ராம பால ஆஞ்சனேயா் கோயில்.

திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் கோயிலுக்குள் புகுந்து உள்ளே இருந்த சுமாா் 2 சவரன் தாலி, 5 கிலோ வெள்ளி மற்றும் வெண்கலப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். மேலும் கோயிலில் இருந்த 2 உண்டியல்களையும் உடைத்து அதிலிருந்த காணிக்கையையும் திருடிச் சென்றுள்ளனா்.

திருடப்பட்ட தங்கம், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மா்ம நபரகள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஹாா்ட் டிஸ்கையும் உடைத்து எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனா்.

Story image