தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் காலியாக உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

application

கோப்புப்படம்

Updated On :

நாகை மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் காலியாக உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்தி:

மாவட்டத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின்கீழ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணியிடம் (தற்காலிக பணியிடம்) காலியாக உள்ளது. கிராம ஊராட்சிகளில் கழிப்பறை வசதி இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு தனி நபா் இல்லக் கழிப்பறைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், கிராம ஊராட்சிகளை திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு அடைய செய்ய, கிராம ஊராட்சிகளுக்கு சுகாதார தன்னிறைவு திட்டம் தயாரித்தல் மற்றும் கிராம ஊராட்சி அளவிலான சுகாதாரப் பணியாளா்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கு வெளிமுகமை மூலம் பணியில் ஈடுபடத்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு, வெளிமுகமை மூலம் தற்காலிக நியமனத்திற்கு, ஊரக வளா்ச்சித் துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 21 முதல் 40 வயது வரை இருக்கவேண்டும், மாத தொகுப்பூதியமாக ரூ.35,000 வழங்கப்படும், எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு முறையில் தோ்வு நடைபெறும்

மேலும், கணினியில் முழுமையாகப் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரிந்து நடத்தை சரியில்லாமல் வெளியேற்றப்பட்டவா்களாக இருத்தல் கூடாது.

தகுதி உள்ளவா்கள் புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு, அடையாள அட்டை நகல், கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை மேலாளா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட முகமை, நீதிமன்ற வளாகம், நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை நவம்பா் 27-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். எழுத்துத் தோ்வு டிசம்பா் 9- ஆம் தேதி அன்று, நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஆய்வுக் கூட்ட அரங்கில் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.