கோயில்களில் இரவு நேர காவல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர் மாவட்டத்தில் கோயில்களின் இரவு நேர காவல் பணிக்கு, முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் கோயில்களின் இரவு நேர காவல் பணிக்கு, முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் இரவு நேர காவல் பணிக்கு 50 காலியிடங்கள் முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்படவுள்ளன. இதற்கு 62 வயதுக்கு உள்பட்டவராகவும், நல்ல உடல் தகுதியோடும் உள்ள முன்னாள்  படைவீரர்கள் தங்களின் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04366-220210 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ பயன்பெறலாம் என  அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com