மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் அக். 22-ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.


திருவாரூர் மாவட்டத்தில் அக். 22-ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 3.10.2017 அன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல்கள் திருவாரூர், மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலகங்களிலும், அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், 1,152 வாக்குச்சாவடி மையங்களிலும் தொடர்புடைய பாகங்களின் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். சனிக்கிழமை நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், 1.1.2018 அன்று 18 வயது நிறைடைய உள்ளவர்கள், 31.12.1999 வரை பிறந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம்-6 ஐ பெற்று அதைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் மார்பளவு வண்ணப் புகைப்படம், வயது மற்றும் இருப்பிடத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளரின் பெயரை நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் -8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய படிவம் 8 ஐ அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் 31.10.2017 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சிறப்பு முகாமில் காலை 9.30 மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
வாக்காளர் பட்டியல்களை www.elections.tn.gov.in என்ற வலை தளத்தில் காணலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...