முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு தொடங்கியது

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட 27-ஆவது இரண்டு நாள் மாநாடு நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:40 am IST

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட 27-ஆவது இரண்டு நாள் மாநாடு நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
சங்க மாவட்ட தலைவர் எஸ். வீராச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வரவேற்புக்குழுச் செயலாளர் நடேச. தமிழார்வன் வரவேற்றார். மன்னார்குடியிலிருந்து எடுத்து வரப்பட்ட 27-ஆவது மாநாட்டு கொடியை முன்னாள் எம்.பி.
எம். செல்வராஜ் பெற்றுக் கொண்டார். தியாகிகள் நினைவுச் சின்னத்தை முன்னாள் எம்எல்ஏ. என்.பெரியசாமி திறந்து வைத்தார். கூத்தாநல்லூரிலிருந்து தியாகி சாமிநாதன் நினைவுச்சுடர் கொண்டுவரப்பட்டது. மாநாட்டு கொடியேற்றப்பட்டது. முன்னாள் எம்.பி. மறைந்த எம். காத்தமுத்துவின் திருவுருவப்படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலர் இரா. முத்தரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வை. சிவபுண்ணியம் மற்றும் கட்சி நிர்வாகிகள், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் விவசாயத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மாநாடு திங்கள்கிழமை நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.