போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் காவலர்கள் நியமிக்கப்படுவார்களா?
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மன்னார்குடி நகராட்சியில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கும்பகோணம்-பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்- வேதாரண்யத்துக்கு மையமாக மன்னார்குடி உள்ளது. இதனால், மன்னார்குடி வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் மட்டுமன்றி லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.
புதிய நகர்கள் உருவாகி குடியிருப்புகள் அதிகரித்து மன்னார்குடி நகராட்சி எல்லை ஆண்டுதோறும் விரிவடைந்து வருகிறது. மன்னார்குடிக்கு நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். மேலும், 75 சதவீதம் வீடுகளில் ஒரு இருசக்கர வாகனம், 40 சதவீதம் இரண்டு இருசக்கர வாகனம், 25 சதவீதம் பேரிடம் கார் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. மக்கள்தொகை பெருக்கம், நகர் விரிவாக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என அனைத்தும் உயர்ந்து வரும் நிலையில், மன்னார்குடியில் போக்குவரத்துக் காவலர்களின் எண்ணிகை ஒரு சார்பு ஆய்வாளர் மூன்று காவலர் என்ற எண்ணிக்கையில் மிக குறைந்த அளவில் உள்ளது.
கீழப்பாலம், காமராஜர் சிலை, ருக்மணிபாளையம், பேருந்து நிலையம், பந்தலடி ஆகிய இடங்களில் 15-க்கும் மேற்பட்ட போக்குவரத்துக் காவலர்கள், சூழற்சி முறையில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது எண்ணிக்கை சொற்ப அளவில் உள்ளது. இவர்களுடன் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒரு சிலரை இணைத்துக் கொண்டு போக்குவரத்தைக் கண்காணிப்பது,பிரதான கடைவீதிகளில் பொதுமக்கள் நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் ருக்மணிபாளையத்தில் தானியங்கி சிக்னல் சேவை தொடங்கப்பட்டது.
நகரின் மைய வணிகப் பகுதியான பெரியக்கடைதெருவில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்களுக்கு வருபவர்கள், சாலையை இரண்டாகப் பிரித்து நடுவில் அமைக்கப்பட்டிருந்த இரும்பாலான தடுப்புகள் என்ன காரணத்தினாலோ அகற்றப்பட்டுள்ளன. அந்த இடங்களில் பேருந்து, வேன், கார் ஆகியவற்றை நிறுத்திவிட்டுச் சென்று விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் வர்த்தகர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே, மன்னார்குடி போக்குவரத்துக் காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு போக்குவரத்துக்கும்,வியாபாரத்துக்கும் இடையூறாக நகரின் பிரதான கடைவீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கும், வாகனம் நிறுத்த அனுமதிக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும். மேலும், போக்குவரத்து சீரான முறையில் நடைபெறவும், அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், அதிக எண்ணிக்கையில் போக்குவரத்துக் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...