கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போலி நகைகள் அடகு வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் போலி நகைகள் அடகு வைத்து மோசடி

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:34 pm

DIN

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்ததாக, அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் முருகேசன் என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் ஆய்வுகள் நடைபெற்றபோது, ஏராளமான போலி நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து  நிதி நிறுவனத்தின் மேலாளர் முத்துக்குமார் திருத்துறைப்பூண்டி போலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நகை மதிப்பீட்டாளர் முருகேசனிடம்,  திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி பலுல்லா தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக, முருகேசன் கைது செய்யப்பட்டு,  திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிபதி உத்தரவின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.