சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மரத்திலிருந்து விழுந்தவர் சாவு

மன்னார்குடி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 1:52 am

DIN

மன்னார்குடி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
நெம்மேலி, தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் க. செல்வராஜ் (48). மரம் வெட்டும் தொழிலாளியான இவர், இடையர்நத்தம் பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூராக இருக்கும் மரக்கிளைகளை வெட்டும் பணிக்கு புதன்கிழமை சென்றிருந்தார். அவருடன் மேலச்சேரியைச் சேர்ந்த ரவி, சிவமணி ஆகியோரும் சென்றிருந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஆலமரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, செல்வராஜ் நிலை தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, திருமக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.