கூத்தாநல்லூரில் செவ்வாய்க்கிழமை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள், இளைஞர்கள் எழுச்சி நாள் மற்றும் ஈரோடு மண்டல மாநாடு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர் நகர திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார்.
இதில், திமுக தலைமைக்கழக செய்தி தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, கொரடாச்சேரி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மு. அறிவழகன், மன்னார்குடி கிழக்கு ஒன்றியச் செயலர் குமரேசன், கூத்தாநல்லூர் நகரச் செயலர் காதர்உசேன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பூண்டி கே. கலைவாணன் பேசியது: சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர் திமுக தலைவர் மு. கருணாநிதி. திமுக ஆட்சியில் இல்லாத காலங்களிலும் மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி.
இதுவரை எந்தக் கட்சியும் செய்ய முடியாத வகையில், ஈரோட்டில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தியுள்ளது திமுக. தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி அமைக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ஸ்ரீபாலாஜி மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தோ்தலில் ஆா்.சி.பால் கனகராஜ் வெற்றி

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு மீண்டும் தண்டனை குறைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

