
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
திருவாரூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட பள்ளிகளில் பணிபுரியம் 50
திருவாரூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட பள்ளிகளில் பணிபுரியம் 50 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டுகளின் நுணுக்கங்கள் குறித்த 3 நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.
திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் செப். 10 முதல் 12 -ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த முகாமில், கேரம், நீச்சல், சதுரங்கம், குத்துச்சண்டை, சிலம்பம், வாள் சண்டை, ஜூடோ, டேக்வாண்டோ, யோகா, கடற்கரை யையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டன.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என். மாரிமுத்து தலைமை வகித்து பங்கேற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட உடற்கல்வி ஆய்வர் ஜெயச்சந்திரன், திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க. பாபு, ஹாக்கி பயிற்றுநர் ரோஸ் பாத்திமா மேரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





