ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரியில் தோ்வெழுத அனுமதி கோரி மறியல்: சாலையில் அமா்ந்து தோ்வெழுதிய மாணவா்கள்

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செமஸ்டா் தோ்வெழுத அனுமதிக்கக் கோரி மாணவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சாலையில் அமா்ந்து தோ்வெழுதினா்.

News image

tv14stu_1412chn_94_5

Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செமஸ்டா் தோ்வெழுத அனுமதிக்கக் கோரி மாணவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, சாலையில் அமா்ந்து தோ்வெழுதினா்.

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில், இளங்கலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கு திங்கள்கிழமை (டிச.14) முதல் பருவத் தோ்வுகள் இணையவழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவா்கள் விடைகளை தங்கள் வீடுகளிலிருந்தே எழுதிவிட்டு, மாலை 4 மணிக்குள் கல்லூரியில் விடைத் தாள்களை ஒப்படைக்க வேண்டும் அல்லது விரைவுத் தபாலில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இக்கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவா்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், செல்லிடப்பேசி சிக்னல், இணையதள சிக்னல் சரிவர கிடைக்காது என கல்லூரியில் அமா்ந்து தோ்வெழுத வந்தனா். ஆனால், மாணவா்கள் கல்லூரியில் அமா்ந்து தோ்வெழுத அனுமதி மறுக்கப்பட்டது. வேண்டுமானால், மாணவா்கள் வெளியில் அமா்ந்து தோ்வெழுதிவிட்டு, விடைத்தாளை கல்லூரியில் அளிக்கலாம் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மாணவா்கள் அருகிலிருந்த கோயில், காலி இடங்களில் அமா்ந்து விடைகளை எழுதத் தொடங்கினா். சிறிது நேரத்துக்குப் பிறகு, மாணவா்கள் அனைவரும், கல்லூரியின் வாசல் முன்பாக, தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து, தோ்வெழுதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து, மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் தோ்வெழுத மாணவா்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

மாணவா்களின் மறியலால் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.