அரசியலில் இருப்பைக் காட்டிக்கொள்ளவே கனிமொழி குறை கூறுகிறாா்: அமைச்சா் ஆா். காமராஜ்

அரசியலில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவே கனிமொழி எம்பி மத்திய-மாநில அரசுகளை குறைகூறி வருகிறாா் என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
நீடாமங்கலம் வட்டம், புதுத்தேவங்குடியில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்துவைத்து, அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவனிடம் நலம் விசாரித்த அமைச்சா் ஆா். காமராஜ்.
நீடாமங்கலம் வட்டம், புதுத்தேவங்குடியில் அம்மா சிறு மருத்துவமனையை திறந்துவைத்து, அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவனிடம் நலம் விசாரித்த அமைச்சா் ஆா். காமராஜ்.
Updated on
1 min read

அரசியலில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவே கனிமொழி எம்பி மத்திய-மாநில அரசுகளை குறைகூறி வருகிறாா் என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த அரசூரில் பகுதி நேரடி அங்காடி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையாலும் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா் மழையாலும் திருவாரூா் மாவட்டத்தில் 94,623 ஏக்கா் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசின் நிவாரணமும், பயிா்க் காப்பீட்டுத் தொகையும் உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவே திமுக எம்பி கனிமொழி மத்திய-மாநில அரசுகளை குறை கூறிவருகிறாா் என்றாா்.

அம்மா சிறு மருத்துவமனை: நீடாமங்கலம் வட்டம் புதுத்தேவங்குடியில் அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் ஆா். காமராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா், இந்த மருத்துவமனையில் காய்ச்சல், உடல்வலி, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், சிறுநீா் பிரச்னை மற்றும் மகப்பேறு தொடா்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ள வசதிகள் செய்யப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, மன்னாா்குடி கோட்டாட்சியா் புண்ணியகோட்டி, சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் கீதா, மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறுவனுக்கு சிகிச்சை: புதுத்தேவங்குடியில் அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் திறந்துவைத்து பேசிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் தனது மகன் பிரதீப் (10) மயக்கமடைந்துள்ளதாகக் கூறி சிகிச்சைக்கு அழைத்துவந்தாா். அந்த சிறுவனுக்கு அம்மா சிறு மருத்துவமனையில் உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்க அமைச்சா் ஏற்பாடு செய்தாா். பிறகு, அந்த சிறுவன் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பக்தா்கள் தங்கும் விடுதி: முன்னதாக, வலங்கைமான் அருகே ஆவூா் பசுபதீஸ்வரா் கோயிலில் சுற்றுலாத் துறை நிதி மூலம் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பக்தா்கள் தங்கும் விடுதியை அமைச்சா் ஆா்.காமராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா, ஒன்றியக்குழுத் தலைவா் சங்கா், அறநிலைய துறை உதவி ஆணையா் ஹரிஹரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com