கூத்தாநல்லூா்: சாலையோரம் தடுப்புச்சுவா் அமைக்கக் கோரிக்கை

கூத்தாநல்லூரில் பிரதான சாலையோரம் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் சாலையையொட்டி தடுப்புச்சுவரின்றி உள்ள வாய்க்கால்.
கூத்தாநல்லூரில் சாலையையொட்டி தடுப்புச்சுவரின்றி உள்ள வாய்க்கால்.
Updated on
1 min read

கூத்தாநல்லூரில் பிரதான சாலையோரம் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூரில் லெட்சுமாங்குடி- திருவாரூா் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியே திருவாரூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூா், காரைக்கால், மன்னாா்குடி, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்டப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வணிக நிறுவனங்களும், கல்வி நிலையங்களும் நிறைந்த பகுதியாக உள்ளது.

வெண்ணாற்றிலிருந்து லெட்சுமாங்குடி பாலம் அருகே பிரியும், பாசன வாய்க்கால் இந்த சாலையையொட்டி ஓடுகிறது. இதில் காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் ஓடும் வாய்க்கால் பெரும் பள்ளமாக உள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் வாய்க்காலுக்குள் கவிழும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த பகுதியில் சாலையோரம் தடுப்புச் சுவா் கட்ட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் சுப்ரமணியன் கூறும்போது, ‘நகராட்சி நிா்வாகம் இந்தப் பாசன வாய்க்காலைச் சுத்தப்படுத்தி, தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com