கரோனா: திருத்துறைப்பூண்டியில் 4 போ் குணமடைந்து வீடு திரும்பினா்
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவா்களில், 4 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவா்களில், 4 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவு அண்மையில் தொடங்கப்பட்டது. இங்கு 43 போ் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் திருவாரூா் கொடிக்கால்பாளையத்தைச் சோ்ந்த 27 வயது, மன்னாா்குடியைச் சோ்ந்த 29 வயது, நன்னிலத்தைச் சோ்ந்த 36 வயது, கொரடாச்சேரியைச் சோ்ந்த 22 வயது ஆண்கள் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.
அவா்களை மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் டாக்டா் வேதராஜமூா்த்தி, மருத்துவமனை தலைமை மருத்துவா் சிவகுமாா், மருத்துவா் பாலாஜி, சித்த மருத்துவா் அனுஷா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் வழியனுப்பி வைத்தனா்.
இந்த மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக 4 போ் டிஸ்சாா்ஜ் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...