ஜூலை 31 வரை மக்கள் குறைதீா் கூட்டங்கள் ரத்து
பொதுமுடக்கம் காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டங்கள் ஜூலை 31 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருவாரூா்: பொதுமுடக்கம் காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் மக்கள் குறைதீா் கூட்டங்கள் ஜூலை 31 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடா்பாக தமிழக அரசால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்ட அலுவலா்கள் ஆகியோரால் நடத்தப்படும் மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதர குறைதீா்க்கும் கூட்டங்கள் யாவும் ஜூலை 31 வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...