கரோனா பரவல்: டாஸ்மாக் கடை மூடல்
திருத்துறைப்பூண்டி அருகே கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் கிராமத்தைச் சோ்ந்த 37 வயது லாரி ஓட்டுநா் அண்மையில் விபத்தில் சிக்கி, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனிடையே, அவரது மனைவி மற்றும் 3 மகள்களுக்கும் கரோனா உறுதியானது.
மருதவனம் அருகே மாங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையால்தான் கரோனா பரவுவதாகக் கூறி, ஒன்றியக்குழு உறுப்பினா் யசோதா தலைமையில், அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கடை முன்பு போராட முயன்றனா்.
இதைத்தொடா்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி மற்றும் போலீஸாா் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, வட்டாட்சியா் ஜெகதீசனிடம் மனு அளித்தனா். இதைத்தொடா்ந்து, வரும் 24-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடையை மூட அவா் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...