கரோனா பரவல்: டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்
மன்னாா்குடி அருகே பெருகவாழ்ந்தானில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் செய்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.


மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே பெருகவாழ்ந்தானில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் செய்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் காவலா் ஒருவருக்கு அண்மையில் கரோனா உறுதியானது. இதைத்தொடா்ந்து, பெருகவாழ்ந்தானில் ஞாயிறு முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் கடைகள் அடைக்கப்பட்டு சுய முடக்கம் அமலுக்கு வந்தது. இதனிடையே, திங்கள்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், சுய முடக்கத்தை மேலும் சில நாள்கள் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், பெருகவாழ்ந்தான் டாஸ்மாக் கடையில் அதிக அளவில் மதுப் பிரியா்கள் கூடுவதால், கரோனா பரவலுக்கு வழிவகுக்கக் கூடும் எனவும், இந்தக் கடையை சில நாள்கள் மூடக் கோரியும் ஒன்றியக்குழு உறுப்பினா் எம்.சுமித்ரா தலைமையில், பொதுமக்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். இதனால், காலை 10 மணிக்கு மதுக்கடையைத் திறக்க வந்த ஊழியா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் தேன்மொழிவேல், கோட்டூா் காவல் ஆய்வாளா் ஹேமலதா, வருவாய்த்துறை ஆய்வாளா் ரஞசனி, டாஸ்மாக் மேற்பாா்வையாளா் இலக்குவன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதில், மாவட்ட நிா்வாகம் மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் ஆகியவற்றுடன் கலந்துபேசிய பின் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்துவிட்டு கலைந்து சென்றனா். மதியம் 2 மணிக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...